"ஜன கண மன" பாடல் முதன்முதலில் பாடப்பட்ட கோவை சர்வஜன பள்ளி நூற்றாண்டு விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
தேசிய கீதமான ஜன கண மன பாடல் முதன்முதலில் பாடப்பட்ட கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சர்வஜன மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் வேறு எந்த பள்ளிக்கும் இல்லாத சிறப்பு இந்த பள்ளிக்கு உண்டு என்றார்.
சர்வஜன பள்ளிக்கு 1926ஆம் ஆண்டு, நமது நாட்டின் தேசிய கீதத்தை எழுதிய வங்க மொழிப் புலவர் இரவீந்திரநாத் தாகூர் வருகை புரிந்துள்ளார்.
ஜன கண மன தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே, முதன்முதலாக, கோயம்புத்தூர் சர்வஜன பள்ளியில், ரவீந்திரநாத் தாகூர் தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.
இதன் மூலம், பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, நாட்டு வணக்கப் பாடலாக ஏற்று பாடி வந்த பெருமையை உடையதாக சர்வஜனம் மேல்நிலைப்பள்ளி திகழ்கிறது.
Comments